சளி உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
தற்போதைய காலகட்டத்தில் அதிகமானோர் சளி இருமல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டு கொண்டிருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் சாதாரண சளித் தொல்லைக்கு அவர்களால் மருத்துவமனைக்கு செல்ல இயலாது. மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக நமது முன்னோர்களின் நாட்டு மருத்துவத்தை முயற்சி செய்து பார்க்கலாம்.
அந்த வகையில் தூதுவளை மிக மிக நல்லது. தூதுவளை கசாயம் சளியை குணப்படுத்துவதில் நல்ல பலனை தரும். இதனை கஷாயமாக மட்டுமின்றி தூதுவளை சட்னி செய்தும் சாப்பிடலாம். ஆனால் இது தடுப்பு மருந்து அல்ல சளி இருந்தால் மட்டும் சாப்பிட்டால் அது குணமாகும். இரண்டாவது ஆடாதோடா இலை. ஆடாதோடா இலை, வெற்றிலை, மிளகு மூன்றையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இது சளி அடைப்பு, தலைவலி உள்ளிட்ட உள்ளிட்ட தொந்தரவுகளுக்கு இது அருமருந்து.