Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆயுசுக்கும் சளி உங்கள் உடலை சீண்டாது… இதை குடியுங்கள்..!!

ஆயுசுக்கும் சளி உங்கள் உடலை சீண்டாது இந்த முறையில் கஷாயம் செய்து குடித்து வாருங்கள்.

சளி போக்க வழி என்ன.?

நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி மொத்தமும் மலத்துடன் வெளியேறிவிடும். சளி, இருமல் ஜலதோஷம் வந்துச்சின்னா உடனே மெடிக்கலுக்கு போவீர்கள். ஒரு மாத்திரை வாங்கி போடுவீர்கள். அப்படி செய்வதால் சளி உங்கள் உடலை விட்டு விலகாது. உடலுக்குள்ளேயே ஒரு ஓரம் ஒதுங்கிக்கொள்ளும். திரும்ப ஏதாவது குளிர்ச்சியாக சாப்பிட்டால் சளி உடலில் அதிகரித்து விடும்.

இத தவிர்த்து இயற்கை முறையில் சளியை போக்க ஒரு கஷாயம் செய்து குடித்து உடலில் இருந்து ஒரே அடியாக சளியை மலம் வழியாகவோ, வாய் வழியாகவோ, அல்லது வியர்வை வழியாகவோ வெளியே கொண்டு வரவேண்டும். ஆயுசுக்கும் உங்க பக்கத்துல கூட சளி  வராது என்று சொல்லலாம். பொதுவாக சிகரெட் பிடிப்பவர்களுக்கு சளி அதிகமாக கட்டும். காலையிலே எழுந்ததும் கட்டி கட்டியாக துப்புவார்கள்.

தேவையான பொருட்கள்:

கல்லுப்பு                  – கால் டீஸ்பூன்
மஞ்சள் பொடி      – அரை டீஸ்பூன்
வெற்றிலை             – ஒன்று
தண்ணீர்                  – ஒரு கப் அளவு
கருஞ்சீரகப் பொடி- அரை ஸ்பூன்

செய்முறை:

முதலில் நாம் ஒரு கப் அளவு தண்ணீரை நன்றாக கொதிக்க விட வேண்டும். பின்னர் கொதித்து வரும் பொழுது உப்பு, மஞ்சள் போடி சேர்த்து மறுபடியும் கொதிக்க விட வேண்டும். பிறகு அதில் வெற்றிலையை சிறிதாக நறுக்கி போடுங்கள், கருஞ்சீரக பொடியும் சேர்த்து ஒரு கப் தண்ணீர் அரை கப் அளவாக வரும் அளவிற்கு கொதிக்க வைத்து இறக்கி விடுங்கள். பின்னர் மிதமான சூட்டில் குடித்து வாருங்கள்.

இதை 2 வயது தாண்டிய குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குடிக்க வேண்டிய நேரம் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். இல்லை என்றால் இரவு சாப்பிட்ட பின் அல்லது தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னாடி குடித்து வாருங்கள். உடலில் சளி மொத்தமும் காலை வெளியேறிவிடும்.

 

Categories

Tech |