Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

சளியை அறவே போக்க இந்த இரண்டும் போதும்…!!

சளி மற்றும் இருமலை போக்கும் மஞ்சள் தண்ணீர் குடித்து பயன் பெறுவோம்.

அனைவரையும் சளி, இருமல், தும்மல், காய்ச்சல் என்று பாடாய் படுத்திவிடும். அதிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் சிறியவர்கள் , பெரியவர்கள் மிகுந்த தொல்லைக்கு ஆளாவார்கள். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி அன்றாட வேலைகள் பாதிக்கக்கூடும்.

தேவையான பொருட்கள்:

மஞ்சள்                  –  அரை டீஸ்பூன்
உப்பு                       – அரை டீஸ்பூன்
மிதமான சூடுள்ள தண்ணீரில் –  ஒரு டம்ளர்

மஞ்சளில் ஆக்டிவ் இர்ன்ப்ரோமின் மற்றும் குர்குமின் உள்ளதால் மருத்துவ பயன்பாடுகளுக்காக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சளி மற்றும் இருமல் பிரச்சனைகளோடு போராடி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. இவைகள் உப்புடன் சேரும்பொழுது தொண்டையில் ஏற்பட்டுள்ள வறட்சி போக்குகிறது.

செய்முறை:

மஞ்சள் தூளை மிதமான சூடுள்ள தண்ணீரில் சேர்க்க வேண்டும். பின்னர் உப்பு சேர்த்து கலக்க வேண்டும். இந்த நீரை தினமும் காலை, மாலை என இரண்டு முறை குடித்து வந்தால் உடனடியாக சளி குறையும். மேலும் தொண்டைப்புண், இருமல், காய்ச்சல் மற்றும் கபம் நீங்கும். நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் இல்லை. பொதுவாக சளி பிடித்த உடனேயே மருத்துவரிடம் செல்வதை தவிர்த்துவிடுங்கள்.

இந்த எளிய வீட்டு வைத்தியத்தை செய்து பார்த்து பயன்பெறுங்கள் இதை செய்ய ஒரு நிமிடமே போதுமானது. 

Categories

Tech |