சளியை உடனடியாக விரட்டுவதற்கு ஒரு எலுமிச்சை பழம் போதும். அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் பொழுதும் உங்கள் உடம்பு சளியை உற்பத்தி செய்து கொண்டேதான் இருக்கும். ஒரு நாளைக்கு ஒன்றிலிருந்து ஒன்றரை லிட்டர் சளியை நம் உடம்பானது உற்பத்தி செய்கிறது. உதாரணத்திற்கு தூசி, ஒவ்வாமை ஏற்படுத்தும் ஏதோ ஒரு பொருள் நம் மூக்கின் உள் நுழைந்து விடும் பொழுது சளி உற்பத்தி செய்யும் அளவு கட்டுக்கடங்காமல் பெருகி விடுகின்றது.
அதாவது இந்த மாதிரி தருணங்களில் நம் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு உயிரணுக்கள் வேதிப்பொருளை வெளிப்படுத்துகின்றது. இது உடனே தும்மல், அரிப்பு, மூக்கில் ஏதோ திணித்து வைத்தார் போல் உணர்வு போன்றவற்றை தூண்டி விடுகின்றது. இவ்வாறு தூண்டப்பட்ட உடன் சளியை உற்பத்தி செய்யும் திசுக்கள் சளியை தண்ணீரைப் போன்று கசிய விட ஆரம்பிக்கிறது. சளி பிரச்சனையில் இருந்து விடுபட இயற்கை முறையில் மருத்துவத்தினை பின்பற்றுவது நல்லது.
தீர்வு:
முதலில் 3 எலுமிச்சையை எடுத்து கொண்டு பாதி பாதியாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் 2 கப் அளவிற்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு, தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீர் பாதியளவு ஆகும் வரை நன்றாக கொதிக்கவிட வேண்டும். இப்பொழுது 2 கப் நீர், ஒரு கப் அளவிற்கு வற்றும்படியாக வைத்தவுடன்,வெட்டி வைத்துள்ள எலுமிச்சையை அதில் நன்றாக பிழிந்து சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை இரவு தூங்குவதற்கு அரை மணி நேரம் முன்பு, மிதமான சூட்டுடன் குடித்துவிட்டு தூங்கினால் உடம்பில் உள்ள சளி எல்லாம் வியர்வையாக வெளியேறிவிடும்.
இதனை பின்பற்றினால் மருத்துவரை காண வேண்டிய அவசியமே இருக்காது.