நாம் தமிழகர் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிட மாடல் என சொல்லுறாங்களே… ஆம் அவரு மாடல் தான். அப்படின்னா சாம்பிள் பிஸ்.. பொம்மை கடைக்கு போ… துணிக்கடைக்கு போ… வாசலில் ஒரு பொம்மை இருக்கோம். புடவை கடைக்கு போ… ஒரு பொம்மை இருக்கும். அதற்கு பெயர் என்ன ? மாடல். அதுபோல் இது ஒரு பொம்மை. இது ஒரு மாடல்.
தம்பி மாடலை நீ மாதிரியாக தான் பார்க்க வேண்டும். இப்போது ரம்மி ஆடுங்கள், ஆயிரம் ஆயிரமாக பணத்தை எண்ணுங்கள் என்று பேசுவது யார்? அவர் ஒரு மாடல். திராவிட ஆட்சி என்று சொல்ல முடியவில்லை. திராவிட மாடல்..நம்ம அப்பா சொல்வார்கள் அல்லவா ? பால் குடிக்கலாமா அப்பா… குடிக்கலாம். ஆனால் மாடு எங்கே வைத்திருக்கிறாய். பிறகு இது என்னது ? பால் இல்லை. பால் போல ஒன்று.
மாம்பழம் ஒரு பருவத்தில் தான் காய்க்கும். ஆனால் எப்போது பார்த்தாலும் மாம்பழ சாறு குடிக்க முடியுது கடையில்… ஏனென்றால் ? அது மாம்பழ ஃபேவர். அது என்ன ? அது ஒரு சாம்பிள் பீஸ். அது ஒரு மாடல். அதுபோல் இதுவும் ஒரு மாடல். சல்மான்கான், ஷாருக்கான் மாதிரி ஐயா. ஸ்டாலினும் ஒரு மாடல். எதற்கு மாடல் ? கேடுகெட்ட ஆட்சி, கேவலமான ஆட்சி, ஒரு ஆட்சி எப்படி எல்லாம் இருக்கக்கூடாது.
எப்படி எல்லாம் ஒரு தலைவன் நாட்டை நிர்வகிக்க கூடாது என்பதற்கு சரியான மாடல்… முன்னுதாரண மாடல், இந்த திராவிட மாடல். திராவிட மாடல் ஆட்சி என்பது சேவை அரசியலோ, செயல் அரசியலோ கிடையாது. வெறும் செய்தி அரசியல் தான். தமிழகம் மிளிர்கிறது, தமிழகம் ஒளிர்கிறது. எங்கே ? மக்கள் முழுவதும் இருட்டில் இருந்து மெழுகுவர்த்தி ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள்… தமிழகம் மிளிர்கிறது, ஒளிர்கிறது என்று சொல்கிறார்கள்… எல்லாம் ஏமாற்று, பசப்பு வார்த்தைகள், இனிப்பான வார்த்தைகள் என விமர்சனம் செய்தார்.