சல்மான்கான் தற்போது நடித்துள்ள படம் ‘பாரத்’ இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் சல்மான்கான் நடித்துள்ளார்.
இந்தி சினிமா துறையில் பிரபலமான நடிகர் சல்மான்கான் இவர் ஒரு படம் நடிப்பதட்க்கு ரூ.50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிவருகிறார். இவருக்கு தற்போது 53 வயது ஆகிறது இன்னும் இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்களும் வெளிவருகின்றன. இந்நிலையில் சல்மான்கான் இந்தியில் ‘பாரத்’ என்ற படம் நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில்நல்ல வரவேற்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்படத்தில் கத்ரினா கைப், திஷா பதானி, தபு ஆகியோர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்த சல்மான்கானின் புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த சல்மான்கான் தோற்றம் சமூக வலைத்தளத்தில் பெரிதும் வைரலாகி வருகின்றது. படம் ஜூன் மாதம் 5-ந் தேதி வெளிவரும் என்றும் படக்குழு அறிவித்துள்ளனர்.