Categories
இந்திய சினிமா சினிமா

ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சல்மான்கான்…. ஒரு நாள் சம்பளம் இவ்வளவா….!!

 ஹிந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழகுவதற்கான சம்பளத்தை நடிகர் சல்மான்கான் உயர்த்தியுள்ளார்.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. தமிழில் கமலஹாசனும் தெலுங்கில் நாகார்ஜுனாவும் தொகுத்து வழங்கி வருகின்றனர். இவற்றில் 3ம் சீசன் முடிந்து 4ம் சீசன் தொடங்க உள்ளது. ஹிந்தியில் நடிகர் சல்மான் கான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14 வது  சீசனை தொகுத்து வழங்குகிறார். நிகழிச்சியை தொகுத்து வழங்க ரூ.250 கோடி அவரது சம்பளமாக பேசியுள்ளனர். சீசன் 4 முதல் 6 வது சீசன் வரை 2 கோடியே 50 லட்சம் ஒரு நாள் சம்பளமாக வாங்கினார். 7 வது சீசனில் 5 கோடி ஆக அதிகரித்தது.

அதன்பின் 2015இல் 8 கோடியாகவும் அதைத் தொடர்ந்து 17 கோடியாகவும் இருந்தது. தற்சமயம் 20 கோடியே 50 லட்சம் ஒரு நாளுக்கான படப்பிடிப்பின் சம்பளமாக அதிகரித்துள்ளார். ஒரு நாள் படப்பிடிப்பில் 2 எபிசோட்கள் எடுக்க திட்டமிட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கினால் திரையுலகம் முடங்கி கிடந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சல்மான் கான் சம்பாதிக்க துவக்கியுள்ளார். இவர் ஹிந்தியில் ஒரு படத்தில் நடிப்பதற்கு 40 கோடியில் இருந்து 50 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். மேலும் படத்தின் வசூலிலும் அவருக்கு பங்குகள் கொடுக்கப்படுகிறது.

Categories

Tech |