பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் மாஸ்டர் திரைப்படத்தில் சல்மான் கான் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் மாபெரும் வசூல் சாதனையையும் படைத்துள்ளது. இத்திரைப்படம் ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.
இருப்பினும் இதனை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். ஆகையால் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்யின் ஜேடி கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
அதன்படி பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தான் இப்படத்தில் விஜய்யின் ஜோடி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அதுமட்டுமின்றி இப்படத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்த தோடு, இதில் நடிக்க மிகுந்த ஆர்வமாக உள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.