பாலிவுட் நடிகர்களில் பிரபலமான ஒருவர் சல்மான்கான். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நேற்று தனது 58 வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். மும்பையில் உள்ள இவரின் கேலக்ஸி வீட்டில் முன்பு ரசிகர்கள் இவருக்கு நிறைய பதாகைகளுடன் கூடினர்.
அப்போது நடிகர் சல்மான்கான் தனது தந்தை சலீம்கானுடன் சேர்ந்து தனது வீட்டு பால்கனியில் நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்தார். அப்போது அங்கு இருந்த ரசிகர்களுக்கு மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.
இதனையடுத்து இவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் ஷாருக்கான், தபு, பூஜா ஹெக்டே, சுனில் ஷெட்டி மற்றும் பல பாலிவுட் திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினர். இந்நிலையில் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் சல்மான்கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.