கலிஃபோர்னியாவில் தண்ணீரின் தன்மை மாறுவதால் சால்மன் வகை மீன்கள் ஆயிரக்கணக்கில் செத்து மடிவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கலிபோர்னியாவில் சால்மன் வகை மீன்களின் இனப்பெருக்கமானது தண்ணீரின் தன்மை மாறி அசாதாரணமான சூழல் நிலவுவதால் பாதிக்கப்படுதாக தகவல் வெளியாகியுள்ளது. கிளமத் ஆற்றில் வறட்சி காரணமாக தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால் சால்மன் வகை மீன்கள் லட்சக்கணக்கில் செத்து மடிவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அமெரிக்க பழங்குடியினர் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே வனத்துறை அலுவலர் ஒருவர் சேக்ரமெண்டோ ஆற்றில் அசாதாரணமான வெப்பநிலை நிலவுவதால் சீனூக் சால்மன் மீன்கள் இறப்பதாக கவலை தெரிவித்துள்ளார். இவ்வாறு சால்மன் வகை மீன்கள் இறப்பதால் கலிபோர்னியாவில் 1.4 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.