நாடு முழுவதும் உள்ள முடிதிருத்தும் கடைகள் மற்றும் அழகு நிலையங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்க பட்டுள்ளது. இதற்கான விரிவான அறிவுறுத்தலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை பங்கேற்கலாம்; தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் பார்வையாளர்கள் இல்லாமல் விளையாட்டு அரங்குகளை திறக்க அனுமதி
விமானம், ரயில் சேவை, திரையரங்குகள், வணிக வளாகங்கள் செயல்பட விதித்த தடை தொடரும். வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மதம் சார்ந்த இடங்களில் பொதுமக்கள் கூட்டமாக கூட தடை நீட்டிப்பு. பேருந்து சேவைகளை அனுமதிப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம். ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு பேருந்து செல்ல நிபந்தனையுடன் அனுமதிக்கலாம். மாநில அரசுகள் அனுமதி அளித்தால் சிவப்பு மண்டலங்களில் முடிதிருத்தும் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் திறக்கப்படலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.