Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உப்பு அதிகமானால்… நோயும் அதிகமாகும்… கவனமா இருங்க..!!

உப்பை அதிகமாக நாம் உணவில் எடுத்துக்கொண்டால் நோயும் அதிகமாகும்.

உப்பு ஒரு கிருமி நாசினி பொருள். தொண்டை கரகரப்பாக இருக்கும் பொழுது, சளி அதிகமாக இருக்கும் போது நம்முடைய முன்னோர்கள் தண்ணியில் கொதிக்கவைத்து தொண்டையில் வைத்து கொப்பளிக்க சொல்வார்கள். ஏனென்றால் தொண்டையில் உள்ள கிருமி மற்றும் சளியை போக்க உப்பு ஒரு சிறந்த மருந்து. இது மட்டுமில்லாமல் உப்பு அன்றாட வாழ்க்கையில் பல்வேறு தேவைகளுக்கு உதவுகின்றது. என்னதான் உப்பு கிருமிநாசினியாக இருந்தாலும் பலவித நோய்களுக்கு தீர்வாக இருந்தாலும் அதை அதிக அளவில் நாம் எடுத்துக் கொண்டால் நமக்கு ஆபத்து ஏற்படும்.

உணவில் உப்பு அதிகமாக எடுத்துக்கொள்வதால் நோய் எதிர்ப்புசக்தி பாதிக்கப்படுவதாக ஜெர்மனியில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. உப்பு அதிகமானால் ரத்த அழுத்தம் அதிகரிப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது. இதனால் நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒருவர் 5 கிராம் உப்பை உணவில் சேர்த்தால் போதும் என்கிறது உலக சுகாதார அமைப்பு. எனவே நாம் உப்பை அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டாம்.

Categories

Tech |