ப.சிதம்பரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ நடவடிக்கை குறித்து உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார். இதில் பொருளாதார குற்றங்கள் புரிந்தவர்கள் எளிதில் முன்ஜாமீன் பெற்றால் அந்த வழக்கு பலவீனப்பட்டு விடும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்க மறுத்தது இந்த நிலையில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் இரத்து_க்கு எதிராக மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்கை முடியாது என்ற உச்சநீதிமன்றம் தெரிவித்தது.இதை தொடர்ந்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் ப.சிதம்பரத்தை கைது செய்யும் நடவடிக்கையை துரிதப்படுத்தி அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.ப.சிதம்பத்துக்கு எதிரான இந்த நடவடிக்கை குறித்து தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா கூறுகையில் , ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது எந்த ஒரு பெரிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்று விமர்சித்த அவர் உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும், தப்பு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.