உத்தரபிரதேசத்தில் பள்ளி குழந்தைகளுக்கு சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மத்தியிலும் , மாநிலத்தலும் எந்த அரசு வந்தாலும் கல்வியை எந்த அளவுக்கு ஊக்குவிக்கின்றார்களோ அந்தளவுக்கு நாட்டின் வளர்ச்சி சாத்திய படும். மாணவர்களை படிக்க வைக்க அரசாங்கம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.குறிப்பாக தமிழகத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பதற்காக மதிய உணவு வழங்கப்பட்டு தற்போது சத்துணவை வழங்கி வருகின்றது. அதிலும் மாணவர்களுக்கு முட்டை உள்ளிட்ட சத்து மிக்க சுகாதார ஆரோக்கியமான உணவுகளை தமிழக அரசு வழங்கி வருகின்றது.
ஆனால் இதைவிட நேர்மாறாக இந்தியாவின் வடக்கு மாநிலங்கள் இருந்து வருகின்றன. தற்போது அதை நிரூபிக்கும் வகையில் உத்தரப்பிரதேச மாநிலம் அமைந்துள்ளது.உத்தர பிரதேச மாநிலத்தின் மிர்ஸாபூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு தினமும் தலா ஒரு சப்பாத்தியும், அதற்கு தொட்டு கொள்ளுவதற்கு உப்பும் கொடுக்கப்பட்டுள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உத்திரபிரதேச அரசின் மீது கடும் விமர்சனம் எழுந்தது.
மேலும் இது தொடர்பாக வெளியான வீடியோ மற்றும் போட்டோக்களில் பள்ளி வளாகத்தில் குழந்தைகள் அமர்ந்து ரொட்டியை உப்பில் சேர்த்து தொட்டுக் கொண்டு சாப்பிடுவது போன்ற காட்சியும், பள்ளி வளாகத்தில் இருக்கும் மதிய உணவுப்பட்டியலில் பருப்பு, சாதம், ரொட்டி, காய்கறிகள் என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.இது குறித்து அம்மாவட்ட மாஜிஸ்திரேட் அனுராக் பட்டேலிடல் கூறும் போது , இது உண்மை என்று தெரியவந்தால் உடனே விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று தெரிவித்தார்.இதற்க்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.