தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நம்மை பெரிதளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய வைரஸ் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதும், விரட்டி அடிப்பதும் மிகவும் சுலபமான ஒன்றுதான். நம் அன்றாட பழக்கவழக்கங்களில் மூலமே அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். அதில் ஒரு சில டிப்ஸ் இதோ,
விரலால் பல் துலக்குபவர்கள் துலக்குவதற்கு முன்னர் 20 நொடிகள் கை கழுவுதல் அவசியம். அதற்கு தண்ணீரை திறந்து வைத்துக்கொண்டே செய்ய வேண்டாம். உணவிற்கு முன்னரோ அல்லது பல் துலக்கிய பின்னரோ வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து அந்நீரை இருபது வினாடிகளுக்கு குறையாமல் வாயில் வைத்து கொப்பளிப்பது நல்லது.