சென்னை 28, தமிழ் படம், கலகலப்பு ஆகிய திரைப்படங்களின் வாயிலாக கவனம் ஈர்த்தவர் மிர்சி சிவா. இவர் அண்மையில் நடித்த காசேதான் கடவுளடா படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து இவர் தற்போது கன்னிராசி, தர்மபிரபு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் முத்துகுமரன் இயக்கத்தில் “சலூன் – எல்லா மயிரும் ஒன்னுதான்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ரேதன் சினிமாஸ் நிறுவனமானது தயாரிக்கிறது. இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். இந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இதை யோகிபாபு தன் சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் மிர்சி சிவா வித்தியாசமான தோற்றத்தில் உள்ள இந்த போஸ்டர் இப்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Hear hear ! 🔊 # Saloon
First look@dir_mkumaran @actorshiva @iYogiBabu @inder3kumar @UrsKarishma @SamCSmusic @dopmanikandan @Sanlokesh @YugabhaarathiYb @TherukuralArivu @Azharfreeze @raja8073 @onlynikil @teamaimpr @CtcMediaboy pic.twitter.com/BQi1DdHjic— Yogi Babu (@iYogiBabu) December 9, 2022