Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் அப்பாவுக்கு வீட்டில் சமாதி… ஊர் மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மகன்..!!

உயிரிழந்த தந்தைக்கு வீட்டினுள்ளேயே மகன் சமாதி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டி சேர்ந்த ராமசாமி நேற்று உடல்நலக்குறைவின் காரணமாக மரணமடைந்தார். இந்நிலையில் அவரது மகன் ராமசாமியின் உடலை வீட்டு வாசலில் உள்ள தென்னை மரத்தின் அடியில் புதைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆனால் அதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டின் உள்ளே சடலத்தை வைத்து கான்கிரீட் சுவர் கட்டுவதற்கு முயற்சித்துள்ளார். இதுகுறித்து தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட விரைந்து வந்த  காவல்துறையினர் மகனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் தன் தந்தையின் ஆசையை பூர்த்தி செய்யவே இவ்வாறு செய்வதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் முதியவரின் உடலை சடலத்தை அங்கிருந்து அகற்ற  முயற்சித்த போது மகன் பாலகிருஷ்ணனும் குடும்பத்தினரும் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அவர்களை சமாளித்து சடலத்தை வீட்டில் இருந்து அகற்றிய அதிகாரிகள் மயானத்தில் தகனம் செய்தனர்..

 

Categories

Tech |