Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சமைத்துக் கொண்டிருக்கும் போது… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பெண் தீயில் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் கூலித் தொழிலாளியான சுரேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சுடலைகனி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சுடலைகனி தனது கணவரை வேலைக்கு அனுப்புவதற்காக வேகவேகமாக சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சுடலைகனியின் சேலையில்  தீப்பொறி பட்டதால் மளமளவென்று அவரின் உடல் முழுவதும் தீயானது பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதனால் சுடலைகனி அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தைக் கேட்டு சுடலை கனியின் கணவரான சுரேஷ் சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுக்கொண்டே தீயை அணைக்க முயற்சி செய்துள்ளார்.

அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து சுடலைகனியின் உடல் முழுவதும் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சுடலைகனிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று சுடலைகனியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |