செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகனிடம் சமந்தா கோவத்தை காட்டியுள்ளார்
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. இவர் வீட்டின் சம்மதத்துடன் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் பல படங்களில் நடித்து வந்துள்ளார் இவர்.
சமீபத்தில் நடித்த ஜானு படத்தின் வெற்றிக்காக திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது சமந்தாவை பார்த்த தமிழ் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயற்சித்துள்ளார். இதனை பார்த்த சமந்தா நடப்பது என்றால் ஒழுங்காக நட என சாடியுள்ளார். மேலும் போட்டோ எடுக்கிற வேலை எல்லாம் வேண்டாம் என கறாராக கூறியுள்ளார்.