நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தெலுங்கு மொழி நிகழ்ச்சியில் சமந்தா கலந்துகொண்ட புரோமோ வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், இவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதனையடுத்து, இவரின் விவாகரத்து குறித்து பல வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சமந்தா ஒரு பதிவை சமீபத்தில் வெளியிட்டார். அதில், என்னைப் பற்றிய தவறான செய்திகள் மற்றும் வதந்திகள் என்னை எந்த விதத்திலும் தாக்காது என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தெலுங்கு மொழி நிகழ்ச்சியை நடிகர் ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் தற்போது சமந்தா கலந்து கொண்டுள்ளார். இந்த எபிசோடில் புரோமோ வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
with @Samanthaprabhu2 Promo
with MAN OF MASSES @tarak9999 pic.twitter.com/tzPMij8LZq
— WORLD NTR FANS (@worldNTRfans) October 10, 2021