Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

காதல் கணவனை பிரியும் சமந்தா…. காட்டுத்தீ போல் பரவும் செய்தி….!!!

முன்னணி நடிகை சமந்தா தனது காதல் கணவனை பிரிய இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும், வெப்சீரிஸ்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் இவர் தனது பெயரில் இருந்த குடும்பப் பெயரை நீக்கியது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதைப்பற்றி நடிகை சமந்தா இதுவரை எந்த தகவலும் வெளியிடாமல் இருக்கிறார்.

இருப்பினும் சமூக வலைத்தளங்களில் பல செய்திகள் பரவி வருகிறது. அந்தவகையில் நடிகை சமந்தாவின் நடவடிக்கை அவரது கணவர் நாக சைதன்யாவின் குடும்பத்தினருக்கு பிடிக்காததால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் நடிகை சமந்தாவும்,  நாக சைதன்யாவும் கூடிய விரைவில் பிரிய இருப்பதாகவும் சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. மேலும் நடிகை சமந்தா திருமணம் முடிந்த மூன்று வருடத்திலேயே காதல் கணவனை பிரிய இருப்பது ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |