நடிகை சமந்தா தனது சமூக வலைதளபக்கத்தில் மீண்டும் பெயர் மாற்றம் செய்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு, சமந்தா ட்விட்டர் பக்கத்தில் ரூத் பிரபு என்ற பெயரை நீக்கிவிட்டு தனது குடும்ப பெயரான அக்கினேனி என வைத்திருந்தார்.
இந்நிலையில்,கடந்த மாதம் அக்கினேனியை நீக்கிவிட்டு S மட்டும் வைத்திருந்தார்.இதனால் சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவருக்கும் இடையில் பிரச்சனை இருப்பதாக கூறப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் பிரிய போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இதனையடுத்து,சமந்தா மீண்டும் ட்விட்டர் பக்கத்தில் S என இருந்த பெயரை Samantha என்று பழையபடியே மாற்றியுள்ளார்.