Categories
சினிமா தமிழ் சினிமா

மன அழுத்தத்தில் இருக்கும் சமந்தா… விடுபட என்ன செய்கிறார்…!!!

பிரபல நடிகை சமந்தா மன அழுத்தத்தில் இருந்து விடுபட யோகா செய்வதாக கூறியுள்ளார்.

கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்யப் போவதாக கூறிய சமந்தா மன அழுத்தத்தில் இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. எனவே அதிலிருந்து விடுபட யோகா செய்கிறார். இது குறித்து பேசிய சமந்தா தனக்கு மன அழுத்தம் இருப்பதாகவும், இடைவிடாது படப்பிடிப்புகளில் பங்கேற்கிறேன் எனவும், ஓய்வில்லாமல் பணியாற்றும் போது மன அழுத்தம் ஏற்படுவது சாதாரணமானது தான் என்றும் கூறியுள்ளார்.

மன அழுத்தத்தில் இருந்து விடுபட யோகா, உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றை செய்கிறேன் எனக் கூறிய அவர் மேலும் தனக்கு ஓய்வு வேண்டும் என விரும்பினால் தோழிகளுடன் சுற்றுலா செல்ல முயற்சிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |