Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தா எனக்கு சகோதரி…. நாகசைதன்யா ஏன் இப்படி இருக்கிறார்….? விளக்கமளித்த ப்ரீத்தம்  ஜூகல்கர்….!!

சமந்தா விவகாரத்தில் தன்னை பற்றிய வதந்திக்கு டிசைனர் ப்ரீத்தம் ஜூகல்கர் விளக்கமளித்துள்ளார்.

சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், இவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் விவாகரத்துக்கு காரணம் சமந்தாவின் டிசைனர் ப்ரீத்தம் ஜூகல்கர் தான் என பலரும் குற்றம் சாட்டி வந்தனர். சமூக வலைதளத்தில் இவரின் பெயர் ரசிகர்களிடையே பரவி வந்தது. இந்நிலையில், இந்த விமர்சனத்துக்கு ப்ரீத்தம்  ஜூகல்கர் விளக்கமளித்துள்ளார்.

samantha-stylist-preetham-jukalker-says-naga-chaitanya-could-have-put-an-end-to-rumours

அவர் கூறிய விளக்கத்தில், ”நாக சைதன்யாவின் அமைதி எனக்கு கவலை அளிக்கிறது. சமந்தா எனக்கு சகோதரி போன்றவர் என்றும் நான் அவரை ஜீஜி என்றழைப்பது அனைவருக்குமே தெரியும் என்றும் கூறியுள்ளார். எங்கள் உறவு முறை என்னவென்று நாகசைதன்யாவுக்கே தெரியும். இருந்தாலும், எங்களைப் பற்றி யாரும் அப்படி பேச வேண்டாம் என்று அவர் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கலாம். அப்படி வெளியிட்டிருந்தால் கூட ரசிகர்கள் என் மேல் குற்றம் சாட்டி இருக்க மாட்டார்கள் எனவும், தவறான தகவல்களையும் பகிர மாட்டார்கள் எனவும், விளக்கமளித்துள்ளார்.

Categories

Tech |