தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகை சமந்தா யசோதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதன்பிறகு நடிகர் விஜய் தேவர கொண்டாவுடன் இணைந்து சமந்தா குஷி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா அரியவகை சரும அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நோயின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என்று கூறப்படும் நிலையில், நடிகை சமந்தா விரைவில் குணமடைந்து வரவேண்டும் என திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் நாக சைதன்யாவின் தம்பி நடிகர் அகில் சமந்தா விரைவில் குணமடைய வேண்டும் என்று டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சமந்தாவை நடிகர் நாக சைதன்யா நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்ததாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அப்போது விவாகரத்தை ரத்து செய்வது தொடர்பாகவும் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.