Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தா-நாகசைதன்யா சேர்ந்து செய்யும் வேலை…. விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி….!!!

நடிகை சமந்தா-நாக சைதன்யா விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுபுள்ளி கிடைத்துள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் சமீபத்தில் தனது பெயரில் இருந்த குடும்பப் பெயரை நீக்கினார். இதனால் நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை பிரிய போகிறார் என்று பேசி வந்தனர். மேலும் அவர்கள் கூடிய விரைவில் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்றும் பல சர்ச்சைகள் வெளிவந்தது.

இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா இருவரும் கோவாவில் ஒரு பெரிய அளவில் இடம் ஒன்றை வாங்கி அதில் கெஸ்ட் ஹவுஸ் கட்டும் வேலைகளை செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒன்றாக இந்த விஷயத்தை செய்யும் போது எப்படி அவர்கள் விவாகரத்து செய்து கொள்வார்கள் என்று பேசிவருகின்றனர்.

Categories

Tech |