Categories
சினிமா தமிழ் சினிமா

மாதவன் பட டிரைலரை பார்த்து…. கண்ணீர் விட்ட சமந்தா…. எதனால் தெரியுமா…??

மாதவன் பட டிரைலரை பார்த்து நடிகை சமந்தா கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

பிரபல இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “ராக்கெட்ரி” என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் திரைக்கதை, எழுத்து, இயக்கம், தயாரிப்பு என அனைத்தையும் நடிகர் மாதவன் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்துள்ளார்.

பிரபல நடிகர் சூர்யா மற்றும் ஷாருகான் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ட்ரைலரை பார்க்கும் பல பிரபலங்கள் மாதவனை பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை சமந்தாவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மாதவனை பாராட்டி பதிவிட்டுள்ளார்.

அதில், “நான் ஒரு வருடத்திற்கு முன்பே இந்த ட்ரைலரை பார்த்து விட்டேன். அப்போதே என் கண்களில் கண்ணீர் வந்தது. மாதவன் சார் நீங்கள் ஒரு ஜீனியஸ்” என்று பதிவிட்டுள்ளார். ஆகையால் இந்த ட்ரெய்லரில் மூலம் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

Categories

Tech |