நடிகை சமந்தா திடீரென பெயர் மாற்றம் செய்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப் படத்திலும் தெலுங்கில் மூன்று படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா சமூக வலைத்தள பக்கங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் அவரது கணக்கின் பெயரை மாற்றியுள்ளார்.
அந்தவகையில் அவர் சமந்தா அக்கினேனி என இருந்த தனது கணவரின் குடும்பப் பெயரை மாற்றி s என்று பதிவு செய்துள்ளார். நடிகை சமந்தா செய்த இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை.