சூர்யாவுடன் நடித்ததை எண்ணி பெருமை கொள்கிறேன் என சமந்தா பேட்டி அளித்துள்ளார்
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா திருமணத்திற்குப் பிறகும் பட வாய்ப்புகள் குறையாத நிலையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
“எனது சிரிப்புதான் எனது பலம்.நான் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பேன். சினிமாவை தொழிலாகவும் வெற்றி அல்லது தோல்வியாக நான் பார்க்கவில்லை. நான் நடித்த படங்கள் வெற்றி அடையும்போது நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நடிகர் சூர்யாவுடன் நடித்ததை எண்ணி பெருமைப்படுகிறேன். கல்லூரி நாட்களில் நான் அவரது தீவிர ரசிகை. அவருடன் நடித்தது பெருமையாக உள்ளது.
சவால்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆரம்ப காலத்தில் ஒரு சில கதாபாத்திரத்திற்கு மட்டுமே நான் பொருந்துவேன் என முத்திரை குத்தி விட்டனர். ஆனால் கடினமாக உழைத்து வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் வேலை செய்தேன். பணத்திற்காக நடிக்கவில்லை எனது கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கவே நான் நடித்தேன். சினிமாவில் கதாநாயகிகளாக சில காலம் தான் இருக்க முடியும். ஆனால் நான் பத்து வருடங்கள் இருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.