சமந்தா மீண்டும் வெப் சீரிஸில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” மற்றும் ”சகுந்தலம்” போன்ற படங்களில் நடித்து வருகிறார். நடிகை சமந்தாவும் நாகசைதன்யாவும் சமீபத்தில் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
இதனையடுத்து, இவர் விவாகரத்துக்குப் பிறகு அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில், இவர் மீண்டும் வெப் சீரியஸில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே ”தி பேமிலி மேன் 2” என்ற வெப்சீரியஸில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.