நடிகை சமந்தா ஸ்லீப்பர் செல் ஏஜன்ட்டாக நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும், சகுந்தலம் எனம் திரைப்படத்திலும் நடித்த வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தாவின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி ஓடிடில் வெளியான ‘தி பேமிலி மேன்’ என்ற வெப் தொடரின் 2-வது சீசன் உருவாகி வருகிறது. ராஜ்- டிகே என இரட்டை இயக்குனர்கள் இயக்கும் இப்படத்தில் சமந்தா வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் அவர் ஒரு பாகிஸ்தான் தீவிரவாத கும்பல் ஸ்லீப்பர் செல் ஏஜென்டாக நடித்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. இந்த வெப் தொடர் கூடிய விரைவில் ஓடிடியில் ரிலீசாக உள்ளது.