சமந்தா தொடர்ந்த வழக்கிற்கு நீதிபதி சொன்ன பதில் வெளியாகியுள்ளது.
நடிகை சமந்தாவும் நாகசைதன்யாவும் சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதனிடையே, இவர்கள் விவாகரத்து பற்றி சமூக வலைதளத்தில் நிறைய வதந்திகள் பரவி வந்தன. இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு நடிகை சமந்தா ஆளானார்.
இந்நிலையில், தன்னை பற்றி தவறான தகவல்களை பகிர்ந்த சில யூடியூப் சேனல்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் சமந்தா. இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி, ‘சம்பந்தப்பட்ட சேனல்கள் மீது வழக்கு தொடர்வதை விட அவர்களை மன்னிப்பு கேட்க சொல்லி சமந்தா கூறி இருக்கலாம்’. என கூறினார். மேலும்,”இந்த மனு சரியான நேரத்தில் விசாரணைக்கு வரும்” என்று உறுதியாக கூறினார். ‘பிரபலங்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய விவரங்களை பொதுவில் பகிர்ந்து கொள்கிறார்கள் பின்னர், அவர்கள் அவதூறு வழக்குகளை தாக்கல் செய்கிறார்கள்’ என்று தெரிவித்தார்.