நடிகை சமந்தாவின் வெப் தொடர் ஓடிடியில் வெளியாக உள்ளது.
உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனாவால் திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியானது. அந்த வகையில் நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மகள்வந்தாள் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி ஓரளவு வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா மற்றும் பென்குயின் ஆகிய திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி தோல்வியை சந்தித்தது.
காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரும் எதிர்பார்த்தபடி வரவில்லை. தற்போது தமன்னாவின் 11 ஹவர் என்ற வெப் தொடரும் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதுவும் நினைத்தபடி அமையவில்லை. இந்நிலையில் முன்னணி நடிகை சமந்தா வில்லியாக நடித்து இருக்கும் ‘தி பேமிலி மேன்’ என்ற வெப்த் தொடர் ஓடிடில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் இத் தொடரின் இரண்டாம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இருப்பினும் சக நடிகைகளின் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி தோல்வியை சந்தித்த போதிலும் சமந்தாவின் வெப்தொடர் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இப்படத்தை ஓடிடியில் வெளியிடுகின்றனர்.