மழை வெள்ளம் சூழ்ந்து நிற்கும் பகுதியில் இருந்து தண்ணீரை வெளியேற்ற ஒன்றிய குழு தலைவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிறுவங்கூரில் இருக்கும் சமத்துவபுரத்தை மழை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. இதனால் அங்கு இருக்கும் வீடுகளில் வசித்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் இருகின்றனர்.
இதனைப் பற்றி அறிந்ததும் ஒன்றியக் குழுத் தலைவர் அலமேலு ஆறுமுகம் நேரில் சென்று சமத்துவபுரத்தை பார்வையிட்டு தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன்பின் 2 பொக்லைன் எயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு வாய்க்கால் போல் ஏற்படுத்தி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.