அதிராம்பட்டினம் பகுதியில் சம்பா நண்டு ஒரு கிலோ ரூபாய் 1300 க்கு விற்கப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். ஆனால் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் மீன் மார்க்கெட் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் நேர குறைபாடு காரணமாக மீனவர்கள் கடலில் இருந்து குறைந்த அளவு மீன்களை பிடித்து அவசரமாக கரைத்துப் திரும்புகின்றனர்.
இந்நிலையில் நேற்று அதிராம்பட்டினம் கடல் பகுதியிலும் புதுக்கோட்டை மாவட்ட கடல் பகுதியிலும் பெரிய அளவு சம்பா நண்டுகள் சிக்கியுள்ளது. இந்த நண்டுகளை விற்பனைக்காக அதிராம்பட்டினம் மார்க்கெட்டுக்கு மீனவர்கள் கொண்டு வந்துள்ளனர். இந்த நண்டானது அரை கிலோ முதல் 3 கிலோ வரை எடை உடையதாக இருந்தது. மேலும் மீன்பிடித் தடை காலத்திற்கு முன்பு வரை ஒரு கிலோ சம்பா நண்டு ரூபாய் 750 க்கு விற்பனை செய்யப்பட்டது.
தற்போது மீன்பிடி தடை காலம் என்பதால் சம்பா நண்டு விலை ஒரு கிலோ ரூபாய் 1300 க்கு விற்கப்படுகிறது. மேலும் இந்த நண்டுகளை வியாபாரிகள் ஏலத்தில் எடுத்து உயர்தரம் ஹோட்டலுக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர். மேலும் மீன்பிடி தடை காலம் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலையில் மீன் வரத்து குறைந்துள்ளது. இதனால் மீன் விலை உயர்ந்து காணப்படுகின்றது.