அரசு ஊழியர்களான தாங்கள் கடந்த 3 மாதங்களாக ஊதியமின்றி வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்று செர்பியாவில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரகம் அதற்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
செர்பியாவில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரகம் அதற்கான அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அரசு ஊழியர்களான தாங்கள் கடந்த 3 மாதங்களாக ஊதியமின்றி வேலை செய்து கொண்டு இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளது.
அதோடு மட்டுமின்றி பணத் தட்டுபாட்டின் காரணத்தால் தங்களது குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது என்றும் பதிவிடப்பட்டுள்ளது.
மேலும் இதுதான் இம்ரான்கான் தலைமையின் கீழ்வுள்ள புதிய அரசா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதனை செர்பியாவில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரி தான் பதிவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.