ஒரு நபரின் இரட்டை குழந்தையை தாயும் மகளும் ஒரே நேரத்தில் பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மின்னசோட்டாவில் வசித்து வருபவர்கள் கேல் பையர்சி-கெல்சி பையர்சி தம்பதி. இத்தம்பதியினருக்கு திருமணமாகி குழந்தையில்லாமல் தவித்து வந்தனர். 31 வயதாகும் கெல்சிக்கு குழந்தையின் மேல் அதிக ஏக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் இந்த தம்பதிகள் மருத்துவரை தொடர்பு கொண்டபோது கெல்சியின் கருப்பைக்கு குழந்தையை தாங்கும் சக்தியில்லை என தெரிவித்துள்ளார். இதற்காக கெல்சி பல சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரால் கருத்தரிக்க முடியவில்லை.
எனவே கெல்சியின் அம்மாவான லீசி பெரும் வருத்தத்தில் இருந்துள்ளார். அப்பொழுது தன் மகளுக்காக தாயே கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொடுத்த செய்தியை ஏற்கனவே படித்த லீசி, தானும் தனது மகளுக்காக கருத்தரிக்க முடிவு செய்து அதை தனது மகளிடம் தெரிவித்துள்ளார். அதன் பேரில் கெல்சியும் அவருடைய தாயும் மருத்துவரிடம் சென்று தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். இதையடுத்து அதற்கான ஏற்பாடுகளை மருத்துவர்கள் செய்துள்ளனர். இதனால் கெல்சியின் குழந்தையானது அவரின் 51 வயதான தாய் லீசியின் கருவில் உருவாகியுள்ளது.
ஆனால் தாயின் வயிற்றில் இந்த கரு உருவான சில நாட்களிலேயே கெல்சியும் கருவுற்றுள்ளார். இது மருத்துவர்களுக்கு பெரும் ஆச்சரியமாக இருந்துள்ளது. இதையடுத்து, ஒரே சமயத்தில் தாயும், மகளும் இரட்டை குழந்தைகளை கருவுற்றிருந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர். அந்த குழந்தைகளுக்கு ஆவே ரே மற்றும் எவர்லி ரோஸ் என பெயர் வைத்துள்ளனர். ஒரே நபரின் இரட்டை குழந்தையை ஒரே சமயத்தில் தாயும், மக்களும் பெற்றெடுத்த சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.