சாமி சாமி என்ற பாடலுக்கு ராஷ்மிகா மந்தனாவை மிஞ்சும் அளவிற்கு நடனமாடிய அதிதி சங்கர்.
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அதிதி சங்கர். இவர் விருமன் படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகியுள்ளார். இவர் பிரபல இயக்குனர் சங்கர் மகளாவார். தற்போது அதிதி சங்கருக்கு ரசிகர்கள் ஆர்மி உருவாகி வருகின்றனர். விருமன் படத்தை அடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து “மாவீரன்” என்ற படத்தில் அதிதி சங்கர் நடித்து வருகின்றார்.
இந்தப் படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. நடிகை அதிதி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவது அவரது வழக்கமாகும். தற்போது அதிதி சங்கரும், தோழியான இந்திராஜ சங்கர் இருவரும் நடனமாடிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் புஷ்பா படத்தில் இடம் பெற்றுள்ள சாமி சாமி என்ற பாடலுக்கு அதிதி சங்கர் மற்றும் இந்திராஜ சங்கர் நடனமாடியுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவை தோற்கும் அளவிற்கு நடனம் ஆடுகிறாரே அதிதி சங்கர் என்று கூறியுள்ளனர்.