Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சேமியா மற்றும் முட்டையுடன் ஈஸியா ஒரு டிபன்…!

ஒரு பாக்கெட் சேமியாவும் 3 முட்டை வைத்து ரொம்ப ஈஸியா ஒரு டிபன் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்…

தேவையான பொருட்கள் :

சேமியா -1கப்
நெய்
முட்டை -3
மஞ்சள்தூள் -சிறிதளவு
மிளகாய் தூள் -தேவைகேற்ப
உப்பு
எண்ணெய்
பட்டை -1துண்டு
கிராம்பு -சிறிதளவு
சோம்பு -கால் ஸ்பூன்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
பச்சைமிளகாய் -2
வெங்காயம் -1 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது
தண்ணீர்

செய்முறை :

ஒரு கடாயில் அரை ஸ்பூன் அளவிற்கு நெய்விட்டு எடுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து  நன்றாக வறுத்து கொள்ளலாம். அதே கடாயில் ஒரு ஸ்பூன் அளவுக்கு நல்லெண்ணெய் விட்டு அதில் முட்டையை உடைத்து ஊற்றவும்.இதில் சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு ,கால் ஸ்பூன்  மிளகாய் தூள் சேர்த்து நன்றாக பொரித்து எடுத்துக்கொள்ளலாம்.

கடாயில் 2 ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு அதில் ஒரு சிறிய துண்டு பட்டை, சிறிது கிராம்பு, கால் ஸ்பூன் அளவுக்கு சோம்பு  சேர்க்கவும். இதனுடன் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளலாம். மேலும் பச்சை மிளகாய்-2,பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும். உங்களுக்கு தேவையானால் கேரட்,பீன்ஸ், பச்சைப்பட்டாணி போன்றவை சேர்த்துக்கொள்ளலாம்.

ஒரு பாக்கெட் சேமியாவிற்கு 250 மி .லி வீதம் தண்ணிர் சேர்க்க வேண்டும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்து சிறிது கொத்தமல்லி இலை சேர்த்து கொதி வந்ததும் சேமியாவை சேர்த்து ஐந்து நிமிடம் நன்றாக வேக விடவும். இதனுடன் பொரித்து வைத்திருக்கும் முட்டையை சேர்த்துக்கொள்ளலாம். கொஞ்சம் கொத்தமல்லி இலை தூவி கலந்து இறக்கவும் நம்மளோட முட்டை சேமியா ரெடி…

Categories

Tech |