கதாபாத்திரம் பிடித்திருந்தால் வில்லியாக நடிப்பதற்கும் தயார் என நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
“கொரோனா ஊரடங்கு நேரத்தை வீணாக்காமல் வீட்டு வேலை, சமையல், இசை, கதை, கவிதை எழுதுதல் என செலவிடுகிறேன். எனக்கு ஒரு இசைக்கலைஞர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என ஆர்வம் உண்டு ஆனால் கனவு பாத்திரம் ஏதும் இல்லை. நல்ல கதை உள்ள படத்தில் வலுவான கதாபாத்திரமாக இருந்தால் வில்லியாகவும் நடிக்க தயாராக உள்ளேன்.
தற்போது அதிக படங்களில் நடிக்க வேண்டும் என ஆர்வம் வந்துள்ளது. எனது கையில் மூன்று படங்கள் உள்ளன, அதில் கவனம் செலுத்துகிறேன். இசை தொடர்பான பணிகளுக்கு அடிக்கடி லண்டன் செல்ல வேண்டியுள்ளது. சினிமா மற்றும் இசையில் உற்சாகத்தோடு ஈடுபடுகிறேன். சம்பளம் முக்கியமில்லை. சினிமா தொழிலாளர்கள் வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர் அவர்கள் அனைவரும் மீண்டும் படப்பிடிப்புகளில் பங்கேற்க வேண்டும் என்பதுதான் தற்போது அவசியம்” என ஸ்ருதிகாசன் குறிப்பிட்டுள்ளார்.