Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“எங்களுக்கு தரவே இல்லை” ஊழியர்கள் போராட்டம்…. அலுவலகத்தில் பரபரப்பு….!!

வேலைக்கான சம்பளம் வழங்காத காரணத்தினால் ஊழியர்கள் அலுவலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் நகராட்சியில் 100-க்கும் அதிகமான நபர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் எல்லோருக்கும் கடந்த அக்டோபர் மாதத்திற்கான சம்பளம் இதுவரை வழங்காமல் இருந்து வருகிறது.

இதனால் கடந்த 20 மாதங்களுக்கு மேலாக கொரோனா தொற்று காலம், தொடர்  தடுப்பூசி முகாம்கள் என விடுமுறை இன்றி வேலை பார்த்து வரும் தங்களுக்கு நவம்பர் மாதம் 15-ஆம் தேதி ஆகியும் அக்டோபர் மாதத்திற்கான ஊதியம் வழங்காமல் மெத்தனமாக நகராட்சி நிர்வாகம் செயல்படுவதாக கூறி அலுவலகத்தின் முன்பாக ஊழியர்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகராட்சி ஆணையாளர் ஆசீர்வாதம் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது இரண்டு நாட்களில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆணையாளர் கூறியதற்கு இணங்க அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |