சம்பாதிக்க ஆரம்பித்தால் பெற்றோரை மதிப்பதில்லை என்று நடிகர் விஜய்யின் அப்பா எஸ்ஏசி கூறியுள்ளார்.
நடிகர் விஜய் இந்திய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். தனது தனித்துவமான நடிப்பினால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் மனதிலும் தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமன்றி ஒரு சிறந்த நடனக்கலைஞர் மற்றும் பின்னணி பாடகராவார். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் விஜய்க்கு துணையாக நின்றது அவரது அப்பா எஸ்ஏசி ஆவார்.
இருப்பினும் சமீபமாக அவர்கள் இருவருக்கும் பிரச்சினை இருப்பது வெளிப்படையாக தெரியவந்துள்ளது. இது குறித்து எஸ்ஏசி கூறியதாவது, ”
எல்லோரும் சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டாங்கண்ணா பெற்றோரை மதிப்பதில்லை. நான் பொதுவாக தான் சொன்னேன். விஜய்யை குறிப்பிட்டு சொல்லவில்லை. என்னுடைய வயசுக்கு நான் நிறைய குடும்பங்களை பார்த்திருக்கிறேன் அதை வைத்து தான் கூறினேன். இந்த விஷயத்தில் குறிப்பிட்டு பார்க்கும்போது விஜய் உலகத்திலேயே சிறந்தவர்.
உங்களுக்கும் விஜய்க்கும் என்னதான் பிரச்சனை என்று கேட்டதும் எந்த வீட்டில் தான் பிரச்சனை இல்லை. உங்க வீட்டில் அப்பா ஏதாவது சொன்னால் உங்களுக்கு கோபம் வருவதில்லையா. இரண்டு நாள் கழித்து எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது இல்லையா. அதே போன்று தான்” என்று அவர் கூறினார். மேலும் “வாரிசு” திரைப்படத்தை பற்றி கேட்டதற்கு, அந்தப் படத்தின் கதை என்ன என்பது எனக்கு தெரியாது? அதில் நான் தலையிடுவதும் இல்லை என்று எஸ்ஏசி கூறியுள்ளார்.