சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவருக்கு லஞ்சம் அளித்த புகாரில் அளிக்கப்பட்டிருந்த சிறை தண்டனையிலிருந்து பொது மன்னிப்பு வழங்குவதாக தென்கொரிய அரசு அறிவித்திருக்கிறது.
தென் கொரிய நாட்டின் முன்னாள் அதிபரான பார்க் கியூன் ஹேக்கிற்கு கடந்த 2017 ஆம் வருடத்தில் சாம்சங் நிறுவனத்தினுடைய துணை தலைவர் லீ ஜே-யோங் லஞ்சம் கொடுத்திருக்கிறார். இதற்காக, சியோல் உயர்நீதிமன்றம், அவருக்கு இரண்டரை வருடங்கள் சிறை தண்டனை விதித்தது.
அதன் பிறகு, 18 மாதங்கள் அவர் சிறை தண்டனை அனுபவித்தார். கடந்த வருடத்தில் அவர் பரோலில், ஐந்து வருடங்கள் பணியில் இருக்க முடியாது, வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது என்ற நிபந்தனைகளுடன் வெளிவந்தார். இந்நிலையில் தென் கொரிய அதிபர் அவருக்கு பொது மன்னிப்பு அளித்து உத்தரவிட்டிருக்கிறார்.
இது குறித்து அதிபர் தெரிவித்ததாவது நாட்டின் வளர்ச்சியில் தொழிலதிபர்களுக்கு இருக்கும் பங்களிப்பிற்காக அவர்களுக்கு சிறப்பு பொது மன்னிப்பு அளிக்கப்படுகிறது. இதனால் தொழில்நுட்பத்தில் முதலிடும், பணிவாய்ப்பும் உயரும். மேலும் நாட்டில் இருக்கும் நிதி நெருக்கடியையும் எதிர்கொள்ள முடியும் என்று கூறியிருக்கிறார்.