சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது .
நியூயார்க் நகரில் நடைபெற்ற விழாவில் சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது புதிய கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது . இதுவரை வெளியான நோட் ஸ்மார்ட்போன்களைவிட புதிய கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் மிகவும் நேர்த்தியானதாகவும், கேலக்ஸி நோட் 10 பிளஸ் பிரம்மாண்ட மாடலாகவும் வடிவமைப்பு கொண்டிருக்கிறது.
மேலும் இரு ஸ்மார்ட்போன்களிலும் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் நீக்கப்பட்டு, ஸ்மா்ட்போன்களின் நடுவில் பன்ச் ஹோல் கட்-அவுட் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 12 ஜி.பி. ரேம்-ஐ நோட் 10 பிளஸ் மாடலில் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி கொண்ட கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 69,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த 10 பிளஸ் ஸ்மார்ட்போன் ஔரா பிளாக், ஔரா குளோ மற்றும் ஔரா வைட் நிறங்களில் கிடைக்கிறது. 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி கொண்ட கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 79,999 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி கொண்ட ஸ்மார்ட்போனின் விலை பற்றி இன்னும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.