பிரபலமான சாம்சங் நிறுவனம் சமீபத்தில் NEO QLED ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் QLED என்பதற்கு அர்த்தம் Quantum light emitting Diode என்பதாகும். அதாவது இந்த டிவியில் மினி எல்இடி-ஐ பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக டிவியின் பிரைட்னஸ் அதிகமாக இருப்பதோடு, பிச்சர் குவாலிட்டி நார்மல் எல்இடி டிவிகளை விட சிறப்பான முறையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவியின் டிஸ்ப்ளே 65 இன்ச் இருக்கும் நிலையில், விலையானது 1,15,000 ரூபாய் ஆகும். இந்த ஸ்மார்ட் டிவிக்கு 5 வருடங்கள் வரை முழு வாரண்டி வழங்கப்படுகிறது.
இருப்பினும் 10 வருடங்கள் வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் டிவி நன்றாக ஓடும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு ஸ்மார்ட் டிவியில் 2000 NTS பிரைட்னஸ் வரை இருக்கிறது. இதனையடுத்து டிவியில் A1 4K Upscaling டெக்னாலஜி, eye protect, 60w audio, 6.2.2 CH surrounding sound , dolby atmos, W/Up firing channel, சவுண்டு மாற்றிக் கொள்ளும் வசதி போன்ற பல அம்சங்கள் இருக்கிறது. மேலும் ஆண்ட்ராய்டு போனில் இருப்பதை டிவியில் பார்த்துக் கொள்ளும் வசதி, கேமிங் வசதி போன்றவைகளும் இருக்கிறது.