சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது .
கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனானது ஏற்கனவே அந்நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். இந்த , கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் ஆக்டா-கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் மற்றும் சாம்சங்கின் ஒன் யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது.
மேலும் , 13 எம்.பி., 2 எம்.பி. பிரைமரி கேமரா, மற்றும் 8 எம்.பி. செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக , பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் வசதியும் வழங்கப்பட்டுள்ளது . இதனுடன் , பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் புளு, கிரீன், ரெட் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. மேலும் , இது 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. , 3 ஜி.பி. ரேம்32 ஜி.பி , என்ற இரண்டு வேரிஎண்ட்களில் உருவாக்கப்பட்டுள்ளது . இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 9,499 மற்றும் ரூ. 10,499 என அந்நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது . மேலும் , இந்த ஸ்மார்ட்போன் விற்பனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது .