சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7 சீரிஸ் 9611 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொடுக்கப்பட்டுள்ளது . இந்த ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு சென்சார், 5 எம்.பி. டெப்த் சென்சார் கேமெராவும் , 32 எம்பி செல்பி கேமெராவும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் 4000 mah பேட்டரியுடன் , 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ30எஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7904 ஆக்டா-கோர் பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் 25 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு சென்சார், 5 எம்.பி. டெப்த் சென்சார் கேமெராவும், 16 எம்.பி. செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 4000 mah பேட்டரியுடன் , 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இந்த சாம்சங் கேலக்ஸி ஏ30எஸ் மற்றும் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன்கள் ப்ரிஸம் கிரஷ் பிளாக், ப்ரிஸம் கிரஷ் வைட் மற்றும் ப்ரிஸம் கிரஷ் வைலட் நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் கேலக்ஸி ஏ30எஸ் விலை ரூ. 16,999 என்றும் கேலக்ஸி ஏ50எஸ் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 22,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 24,999 என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.