ஆனி திருமஞ்சன வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோவிலில் ஆனி திருமஞ்சன சிறப்பு வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு நடராஜர், பெருமாள், சிவகாமி அம்மன் ஆகியோருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், விபூதி போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
இதனையடுத்து சாமி மற்றும் அம்மன் சப்பரத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதில் பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவிலின் பரம்பரை அறங்காவலர் ரத்னகுமார், செயல் அலுவலர் மகேந்திரன் மற்றும் பணியாளர்கள் மேற்கொண்டனர்.