Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

முக கவசம் போடல…. கூட்டம் அதிகமா இருக்கு…. பொதுமக்களின் கோரிக்கை….!!

மீன் மார்க்கெட்டில் சமூக இடைவெளி இன்றி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி வேலூர் மாவட்டம் மக்கான் மீன்மார்க்கெட்டில் மொத்த மீன் விற்பனையும், அங்குள்ள பேருந்து நிலையத்தில் சில்லரை மீன் விற்பனையும் நடைபெற்று வருகின்றது. எனவே கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு இயங்கிய சில்லரை மீன் விற்பனை கடைகள் மீண்டும் மார்க்கெட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று மீன் மார்க்கெட்டில் பெரும்பாலான பொதுமக்கள் திரண்டனர்.

இதனால் அங்குள்ள சில்லறை விற்பனை கடையில் மீன்கள் வழக்கத்தைவிட அதிகமாகவே விற்பனை செய்யப்பட்டது. இதைபோன்று அங்கு இறைச்சி கடைகளிலும் பெரும்பாலானோர் காணப்பட்டதால் மார்க்கெட்டுக்கு வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் திரண்டனர். மேலும் பொதுமக்களில் சிலரும், மீன் கடையில் பணிபுரியும் ஊழியர்களில் சிலர் முககவசம் அணியாமல் இருப்பதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் அதிகம் கூடும் மீன் மார்க்கெட் போன்ற பல்வேறு இடங்களில் உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |