Categories
உலக செய்திகள்

சமூக ஊடங்கள் மீது பாய்ந்த அம்பு…. முன்னாள் அதிபர் தொடுத்த வழக்கு…. கவலையில் தலைமை அதிகாரிகள்…!!

முன்னாள் அதிபர் கூகுள், ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகிய சமூக ஊடங்கங்களின் மீது வழக்கு தொடுத்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூகுள், ட்விட்டர் , ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் வன்முறையை தூண்டக்கூடிய விதத்தில் அவருடைய கருத்துக்கள் மற்றும் தகவல்கள் இருந்ததால் ட்ரம்பு மீது பல்வேறு புகார்கள் எழும்பியது. இதனால் சமூக ஊடகங்களான கூகுள், ட்விட்டர் , ஃபேஸ்புக் ஆகியவற்றில் இருந்த ட்ரம்பின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இதனை அடுத்து ட்ரம்ப் சமூக ஊடங்கங்களான கூகுள், ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகியவற்றின் மீது வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கில் மூன்று சமூக ஊடகங்களின் தலைமை செயல் அதிகாரிகள் தன்னை தணிக்கைக்கு பலியாக்கி விட்டதாக  அவர்கள் மீது ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த வழக்கானது பேச்சு உரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றது.

Categories

Tech |